
உலக புள்ளிவிபர தினத்தை ஒட்டி இன்று (20.10.2020) யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய தொகுப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சு. முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஆகியோருக்கு புள்ளிவிவர பிரிவினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இவ் உலக புள்ளிவிபர தினம் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபர ஆணையகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிற்கும் ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் புள்ளி விபர ஆணையகத்தினால் இவ் வருடம் மூன்றாவது உலக புள்ளிவிபர தினமானது "நம்பத்தகுந்த தரவுகளுடன் உலகை இணைத்தல்" என்னும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

|