சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் முதற் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று (27.10.2020) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

 
img18 img19 img20