கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று( 08.11.2020) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , இராஜாங்க அமைச்சர்கள், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர்,யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) , யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ![]() ![]() ![]() ![]() |