வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும்  ஒரு மரம் (ஹெதன ரட்ட வெடென கஸக்) எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில்  இன்று (09.11.2020) மாவட்ட செயலகத்தால் மாவட்ட செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரங்கள் நடப்பட்டன.

மேன்மை தங்கிய ஜனாதிபதி  அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை கூற்றின்படி இலங்கையின் வனப்பகுதி 30 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன்  இவ் ஆண்டில் ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை " துருவிய லங்கா" நிகழ்ச்சித் திட்டம்  அரச, அரச சாராத மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு உள்ளடங்களாக 1500 மரங்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம் மரம் நாட்டும் நிகழ்வில் மாவட்ட  அரசாங்க  அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர்  ஆகியோர் கலந்துகொண்டார்கள்

 

img10  img11  img12  img13