தொழில் வழிகாட்டலுக்கான இணையத்தளம் (sdajaffna.com) மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(01) மதியம் 12.30 மணிக்கு தொழில் வழிகாட்டலுக்கான இணையத்தளம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

எதிர்காலத்தில்  இளைஞர்களின் கல்வி தகமை, தொழில் தகமைகளை இனங்கண்டு அவர்களுக்கான தொழில் துறையை அமைப்பதே இவ் இணையத்தளம் ஆரம்பிப்பதன் நோக்கம் ஆகும்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்

img1    img2  img3