யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம .பிரதீபன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 26.12.2020 அன்று காலை தேசியக்கொடி ஏற்றலோடு ஆரம்பமாகி யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்று சிறப்புரைகளும் இடம்பெற்றது. 

குறித்த தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Covid-19 இடர்நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

 FB IMG 1609395060635

FB IMG 1609395068641 

 

 
FB IMG 1609395066064 FB IMG 1609395062990