தெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் 26.12.2020 ன்று இடம்பெற்றது.
கடற்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வீடு சேதம் அடைந்த கடற் தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபா காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் அவர்களுடைய வீடு திருத்த பணிக்காக வழங்கிவைக்கப்பட்டது.
 
 
img9 img7 img8 img10