திறன் வகுப்பறைத் தொகுதிக்கான (Smart Classrooms) மடிக்கணிணி வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 23.12.2020 அன்று இடம்பெற்றது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைத் தொகுதிக்கான மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மடிக்கணனிகளை வழங்கி வைத்தார். இன்றைய நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், தீவக வலய பிரதி கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Covid19 இடர்நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் அழைக்கப்பட்டு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() ![]() ![]() ![]() ![]() |