யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழான வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.08.2024) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்திற்கு இவ்வருடம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் குறித்த திட்டங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு தடைப்பட்டுள்ள திட்டங்களை முன்னகர்த்திச் செல்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரமத உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








