யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று 17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவி உத்தியோகத்தர்களிற்காக 12 நாட்கள் வழங்கப்படுகிறது.
யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார்
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவியரீதியில் 16800 வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சியளிப்பதற்கான செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 01.08.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரசிங்க மண்டபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.







