அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும். |
Events
News
அரசு சேவை மையங்கள்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
|
அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு
31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. |















