புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கான உபகரணங்கள் 

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,  மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,  வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு  கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம்,  மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் ,  விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் லெப்டினல் கேணல் ,  புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல்,  பிரதேச செயலாளர்கள்,  கிராம சேவகர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்கள் கலந்துகொண்டார்கள். 
 29712972
 29732975