விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், 14.09.2020 அன்று வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் செயலகத்தில் 15.09.2020 அன்று ஒழுங்கு செய்யப்பட்டது. விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் சால்ஸ்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா, மாவட்ட அரசாங்க அதிபர், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள், வடக்கு மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|