Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan
- தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும். |
Events
News
நூறு ஆண்டுகளைக் கடந்து ஊடகப் பணியாற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் பெருமைக்குரியது – யாழ். அரசாங்க அதிபர்
இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (Associated Newspapers of Ceylon Limited – Lake House) தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், ஸ்ரீ...
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை
இலங்கையில் குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவதையும், சிறுவர் பராமரிப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. வரவேற்புரை : நிகழ்வில் வரவேற்புரையையும் பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மற்றும் அறிமுகத்தையும் SOS Children's Villages Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. எஸ். பத்மராஜா வழங்கினார். நோக்கம் :...
யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளரும் தமது பிரதேச செயலகப் பிரிவில்...
யாழ். மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், உள்ளகக் கணக்காய்வில் காணப்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களை முறையாகப் பேணாமையே கணக்காய்வு...
அனர்த்த முகாமைத்துவத்தில் சர்வமத மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் – யாழ். அரசாங்க அதிபர்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள், டித்வா சூறாவளிக்குப் பின்னரான மக்களின் மீட்பு நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் நலன்புரிச் சேவைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (18.11.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. நோக்கம் : அரசாங்கத்தினால்...
நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமனம்
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான 2025ஆம் ஆண்டுக்கான திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலைய நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (17.11.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சிச் செயலமர்வு ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2026) காலை 9.30 மணிக்கு சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குத் துரிதமான பதிலளிப்பு மற்றும் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குதாரர்களுடனான மாவட்ட மட்டக் கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச மட்டங்களில் அடையாளம் காணப்பட்டு, உரிய மட்டங்களில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அணுகுமுறைகள்...
சமூகசக்தி தேசிய இயக்கத்தின் நிகழ்நிலைத் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு
சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் நிகழ்நிலைத் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.11.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. நோக்கம் : பிரஜாசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் கிராம மட்டத் தரவுகளைச் சேகரித்து, அவற்றை நிகழ்நிலைத் தரவு முறைமையில் உள்ளீடு செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண...
தேசிய உற்பத்தித்திறன் விருதுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் மகிழ்ச்சியான தருணம்
தேசிய உற்பத்தித்திறன் விருதுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் மகிழ்ச்சியான தருணம்! அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடமிருந்து, 2026.11.08 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்டத்தில் முதலாம் இடத்திற்கான விருதை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், தமது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் விருதுடன் இணைந்து பகிர்ந்துகொண்ட இனிய தருணம்






































