15RDAdiscussயாழ் மாநகரத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  இன்றைய தினம் (15.09.2021) மதியம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் யாழ் நகர பிரதேசத்தில் அபிவிருத்தி குழுவால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அவற்றிற்கான நிதியீட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட வரைபுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

13Consumerdis1யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.09.13) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
 
இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு, கடந்த வருடத்திலிருந்து கொரோனாத் தொற்றுப் பரவலினால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

13Covidprevention

யாழ்ப்பாண மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.08.2021 ) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்மாவட்ட செயலகத்தில் இணையவழி நிகழ்நிலையில் நடைபெற்றது.

உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் இணைந்த வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

04Maruladyhouse2

மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (04) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், 2021இற்கு தேவையான மேலதிக நிதி தேவைப்பாடுகள், 2022 இற்கான நிதி ஏற்பாடுகள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய சில ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.