1eboard3இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்  01.11.2021 அன்று காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

28eldersec1முதியோர் தேசிய செயலகத்தால் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் 28.10.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

22productivitydis1தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் 2020 களமதிப்பீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்  22.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

26Veedamaippu2கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 26.10.2021 அன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

15vanivizha1யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக வாணி விழாவானது மாவட்டச் செயலக நலன்புரிக்கழக தலைவர்திருமதி .செ.நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2021) காலை 11 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.