News

Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல்
Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் (07.01.2021 ) அன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,
4th Quarter AMC Meeting
Fourth Quarter Meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 09.12.2020 at 2.30pm under the chairmanship of the Govt.Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium.

யாழ்ப்பாண மாவட்ட 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு...
2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2021.01.01) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.

திறன் வகுப்பறைத் தொகுதிக்கான (Smart Classrooms) மடிக்கணிணி வழங்கும் நிகழ்வு.
திறன் வகுப்பறைத் தொகுதிக்கான (Smart Classrooms) மடிக்கணிணி வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 23.12.2020 அன்று இடம்பெற்றது.

கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு.
தெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் 26.12.2020 அன்று இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம .பிரதீபன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 26.12.2020 அன்று காலை தேசியக்கொடி ஏற்றலோடு ஆரம்பமாகி யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வருடாந்த குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு-2020
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருடாந்த குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு 09.012.2020 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தொழில் வழிகாட்டலுக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு
தொழில் வழிகாட்டலுக்கான இணையத்தளம் (sdajaffna.com) மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16நாள் செயற்பாடு 2020
பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள் விழிப்புணர்வு செயற்பாடு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.

யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம்
யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு மீளாய்வுக் கலந்துரையாடல்
டெங்கு நுளம்பு பெருகுவதைத் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

ஒர் இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்ட தேசிய இளைஞர் படையணிக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒர் இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்ட நீங்கள் உங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை இழிவளவாக்க முறையான பயிற்சிகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (ஹெதன ரட்ட வெடென கஸக்) எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டம்
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (ஹெதன ரட்ட வெடென கஸக்) எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இன்று (09.11.2020) மாவட்ட செயலகத்தால் மாவட்ட செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரங்கள் நடப்பட்டன.

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டம்- சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று( 08.11.2020) நடைபெற்றது.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் -கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம்
கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று 6.11.2020 முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு
சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் முதற் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று (27.10.2020) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என பொதுமக்களுக்கான அரசாங்க அதிபரின் வேண்டுகோள்
தற்போதைய காலகட்டத்தில் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என இன்றைய (26.10.2020) covid 19 ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புள்ளிவிபர தொகுப்பு யாழ். மாவட்ட அரச அதிபரிடம் கையளிப்பு
உலக புள்ளிவிபர தினத்தை ஒட்டி இன்று (20.10.2020) யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய தொகுப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் நீக்கம்
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை ( 20. 10.2020) நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்
யாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட கோரோணா ஒழிப்பு செயலணி கூட்டம்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கோரோணா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றது கூட்ட நிறைவில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்கஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு
யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ( 02.10.2020) இடம்பெற்றது.

சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு
மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை கற்று வருகின்ற சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் 02.10.2020 அன்று இடம்பெற்றது.

கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரின் யாழ்ப்பாண மாவட்ட செயலக விஜயம்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு நேற்று (14.09.2020) மாலை விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்ட தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் தலைமையிலான விவசாய ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், 14.09.2020 அன்று வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திரை நீக்கம் செய்து இன்று 01.09.2020 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததோடு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு...
நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 160 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர் நாளை நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ் மாவட்டம் கொரோனா கட்டுப்பாடு பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய...

யாழ். மாவட்டத்தின் தேர்தல் தற்போதய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சந்திப்பு
யாழ். மாவட்டத்தின் தேர்தல் தற்போதய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சந்திப்பு இன்றையதினம் (23.07.2020 ) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம்
இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (14.07.2020) யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, தெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உட்பட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

யாழில் இரண்டாவது கொரோனா அலையினை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் சுகாதார திணைக்களத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில்இ யாழ்ப்பாணத்தில் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும்இ ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையிலும்

பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர்களுடனான மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரை 02.07.2020 அன்று சந்தித்து கலந்துரையாடினர் .வடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும்

அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களுக்கான இரங்கல் செய்தி.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மிகச்சிறப்பான முறையில் நம்மோடு வாழ்ந்த அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களின் மறைவு அனைத்து மட்டங்களிலும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்கள் தன்னுடைய தனித் திறமையினால் அனைவரது மனங்களையும் வெற்றி கொண்டதோடு நிர்வாக ரீதியாக மிகச் சிறப்பான முறையிலே செயற்பட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தார் என்பதுடன் பல நிர்வாகிகளை...

2nd Quarter AMC Meeting on 26.05.2020
Second quarter meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 26.05.2020 at 2.00pm under the chairmanship of the Govt. Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium. Head of the branch & Divisional Secretaries of the Jaffna District participated in the meeting. Govt. Agent...

யாழ் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள்
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம்திகதி "உயிரியல் பல்வகைத்தன்மை - இயற்கையின் ஓரிடம்" என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்டது.நாடளாவிய ரீதியில் யூன் ஐந்தாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல்...

டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள்
தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைப் பற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆராயப்பட்டது. குறிப்பாக கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அவ் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போதுஎதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும்...
Government Service Centers
Police Stations
Hospitals
Schools
Post Offices
Railway Stations
Nenasala
யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ( 02.10.2020) இடம்பெற்றது.
|