தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “சிறுவர் பாதுகாப்புத் திட்டம் தயாரித்தல்” தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (11) காலை 9.30- மாலை 4.00 மணி வரை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது வடமாகாணத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்றதோடு,இதில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இனங்கண்டு அப்பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

9cult1யாழ்ப்பாண மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நூல்கள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், ஸ்ரீபரமானந்தா சிறுவர், முதியோர் இல்லத்தின் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான, முன்னாள் வடமாகாண பிரதமசெயலாளருமான ஆ.சிவசாமி அவர்களும் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எஸ்.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகர்களும் கலந்து கொண்டனர்.

fmeet2Jaffna District Government Agent Ganapathippillai Mahesan, Menik Amarasingha (U. My. H. C. R Sri Lanka National Head Office) met and discussed with respect.More government presidents (Ghani) and UNHCR representatives of Jaffna district were also participating in this discussion.
9infra2யாழ்ப்பாண மாவட்ட உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஒரு மில்லியன் வீட்டுத்திட்டம், 0.6 மில்லியன் வீட்டுத்திட்டம், மலசலகூடம் அமைத்தல், நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசித்த காணி கொள்வனவு செய்யப்பட்ட மக்களது தற்காலிக வீட்டினை கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கு மாற்றுதல், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், சௌபாக்கியா அபிவிருத்தித்திட்டம், மீன்பிடி அபிவிருத்தித் திட்டம், கிராமிய மற்றும் பாரம்பரிய கிராமிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

8worgt1யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுக் குழுவின் 2022ம் ஆண்டிற்கான முதலாவது கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (2022.02.08) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், வடக்கு மாகாண மகளிர் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துனை அலுவலர்கள், பொலிஸ் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.