யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றையதினம் (08.02 2022) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.மேலும், குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் யாழ். மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் மிக சிறப்பான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதற்கு உதாரணமாக கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி மற்றும் கடமைகளை பரிசீலனை செய்தல் பிரதேச செயலக ரீதியாக இடம்பெற்று சிறந்த உத்தியோகத்தர்கள் தெரிவு இடம்பெற்றமையை தெரிவித்தார்.
சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் இணைந்து ESPD வேலைத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை தொழில் ஒன்றில் ஈடுபடுத்தி வலுவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை ஜெய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுமிது அவர்களும், ஜெய்க்கா நிறுவன உத்தியோகத்தர்களும் கடந்த திங்கட்கிழமை (2022.02.07) சந்தித்து ஆரம்ப வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.மேலும், முதல் கட்டமாக கரவெட்டி, மருதங்கேணி, நல்லூர் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
"சவால்களினை முறியடிக்கும் வளமான நாளை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக சுதந்திர தின நிகழ்வு 04.02.2022 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் காலை 8.19 மணிக்கு தேசிய கீதத்தோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சர்வமதத்தலைவர்களின் ஆசிகளுடன் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்.மாவட்ட சாரணர் சங்கத்தின் மரபுவழி கிளைச்சபை தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.07 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில், சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் கௌரவ ஜெனபிரித் பெர்னான்டோ அவர்களும், வடக்கு கிழக்கு விஷேட ஆணையாளர் கௌரவ எஸ்.எப்.எம்.முகீட் அவர்களும் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கௌரவ மாவட்ட ஆணையாளர் இ.தவகோபால், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் மற்றும் பாடசாலை அதிபர்கள், சாரணர் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
I. Hana Singer, Resident Representative of Navin Sri Lanka, met and discussed with Jaffna District Government agent Ganapatipillai Mahesan yesterday (2022.02.01).







