யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன்  29.11.2021 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.சு.முரளிதரன் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் யாழ். மாவட்டச் செயலகத்தினால் நடாத்தப்படும் "நாளைய ஆரோக்கியத்திற்கான தேசிய உடற்தகுதி திட்டம்" தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வானது கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலும், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் 2021.11.29 அன்று காலை 9 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

25madalre2

 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தொகுத்து வெளிவரும் "யாழ்.மாவட்டச் செயலக மடல்-2020" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (25.11.2021) அன்று மாவட்டச் செயலகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

26landuse1யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.11.2021) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

26centen1மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "சுரகிமு கங்கா" சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 26.11.2021 அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.