பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் ஊடாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவுற்ற மாணவியின் கற்றல் மேம்பாட்டிற்காக 22.11.2021 அன்று  மாவட்டச் செயலகத்தில் மடிக் கணனி வழங்கிவைக்கப்பட்டது.

21centralbankgov1சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் 21.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

 

12cancerdeathregis1புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

19smallenter2யாழ்ப்பாண மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சியாளரை ஊக்குவிக்கும் செயலமர்வு 19.11.2021  காலை 8.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றது.

KMahesanயாழ் மாவட்டத்தில் தொடரும் கனமழையின் காரணமாக இன்று 09.11.2021 யாழ் மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.