மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்.மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (25.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

25unhcr2யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்திட்டத்தின் (கார்த்திகை 25-மார்கழி10) ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (2021.11.25) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

24seed1நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கு அமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.11.24) காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
 
 

25UN1ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி அவர்களும் அவரின் அதிகாரிகளும் யாழ்மாவட்ட செயலகத்திற்கு 23.11.2021 அன்று விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.

23disas5யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று, டெங்கு ஒழிப்பு மற்றும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றால் ஏற்பட கூடிய அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட மட்ட செயலணியின் கூட்டம் 23.11.2031 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.