யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.09.13) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (04) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், 2021இற்கு தேவையான மேலதிக நிதி தேவைப்பாடுகள், 2022 இற்கான நிதி ஏற்பாடுகள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய சில ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.08.2021 ) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்மாவட்ட செயலகத்தில் இணையவழி நிகழ்நிலையில் நடைபெற்றது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,







