24 மணி நேர அவசர சேவை

District Secretary/Government Agent

 

kmahesan

MR.K.Mahesan

 

   -> Situation Report   (26.09.2021 )
 
   -> 24 Hours Emergency Service for COVID 19 Epidemic   
 

    -> கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள்

              தொழில் மேம்பாட்டு  அமைச்சின்  வீடமைப்பு திட்டம் யாழ் மாவட்டம் 2021     ( Last updated : 13.08.2021)

              பிரதேச செயலகத்தினால் காட்சிப்படுத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்ட தெரிவுப்பட்டியல் 

 

 

Events

 No events

News

அபிவிருத்தி திட்ட மீளாய்வுக் கலந்துரையாடல்

24 September 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (22.09.2021) காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

16 September 2021

யாழ் மாநகரத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  இன்றைய தினம் (15.09.2021) மதியம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.    நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் யாழ் நகர பிரதேசத்தில் அபிவிருத்தி குழுவால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அவற்றிற்கான நிதியீட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட வரைபுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

16 September 2021

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.09.13) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.     இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு, கடந்த வருடத்திலிருந்து கொரோனாத்...

இடர் காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் தொடர்பான கட்டளைகளை செயற்படுத்தல் - யாழ்ப்பாண மாவட்டம்.

08 September 2021

உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் இணைந்த வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்.

19 August 2021

யாழ்ப்பாண மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.08.2021 ) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்மாவட்ட செயலகத்தில் இணையவழி நிகழ்நிலையில் நடைபெற்றது.

மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்

17 August 2021

மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (04) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், 2021இற்கு தேவையான மேலதிக நிதி தேவைப்பாடுகள், 2022 இற்கான நிதி ஏற்பாடுகள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய சில ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

JSAC நிறுவனத்தினரால் கொரோனா தடுப்பு மையங்களிற்கு அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு.

17 August 2021

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,

தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள்

31 July 2021

இலங்கையின் தேசியவிளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(30.07.2021) காலை 8.30 மணிக்கு யாழ்மாவட்ட செயலக முன்றலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் Covid-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசியவிளையாட்டு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.குறித்த நிகழ்வில் தேசியக் கொடியினை மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

தென்னம் உற்பத்திசார் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

16 July 2021

சூழலுக்கு நட்புறவான முறையில் தென்னம் உற்பத்திசார் பயன்பாட்டுப் பொருட்களை மனைப் பொருளாதார விருத்தி பங்களிப்பது ஊடாக நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 13.07.2021காலை 11 மணிக்கு இடம்பெற்றது.

வீட்டுக்கு வீடு தென்னை மரம் "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

15 July 2021

வீட்டுக்கு வீடு தென்னை மரம் "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கரவெட்டியில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

« »

Related Links

==> Requesting copies of birth, marriage and death certificates Online
==>  Vehicle Revenue Licence Service  Online
==> Details Of Public Health Inspectors 

 

 

 

Government Service Centers